ரவுடி பேபி.. லாக்கப் பேபி’யான பரிதாப சம்பவம்? கொலை மிரட்டல் விடுத்ததாக காவல்துறை வழக்குப்பதிவு!

0
99

இணையத்தில் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் வீடியோ வெளியிட்டதால் சூர்யா என்னும் டிக்டாக் பயணாளர் மீது காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஐயம்பாளையம் அருகேயுள்ள சபரிநகர் பகுதியில் வசிக்கும் சுப்புலட்சுமி. இவர் டிக்டாக்கில் சூர்யா என்ற பெயரில் பல சேட்டைகளுடன் வலம் வந்தார். பின்னர் ரவுடி பேபி சூர்யா என்ற அடைமொழி பெயரில் இணையவாசிகளால் அழைக்கப்பட்டார். இந்நிலையில் சூர்யா சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் கொரோனா தீவிரம் காரணமாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் பலரை இந்திய அரசு தனி விமானங்களின் மூலம் மக்களை இந்தியாவிற்கு அழைத்து வந்தது. இதில் சூர்யாவும் சிறப்பு விமானத்தின் மூலம் தமிழகத்திற்கு வந்து கொரோனா சோதனக்கு பின் தனது சொந்த ஊரான திருப்பூருக்கு சென்றார். சூர்யா வெளிநாட்டில் இருந்து வந்திருப்பதால் கொரோனா அச்சத்தில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பின்னர் சூர்யாவை தேடி விரைந்து வந்த காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் அவரை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது, தனக்கு கோவை விமான நிலையத்திலேயே கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதாக சூர்யா தெரிவித்தார்.

இதையடுத்து ஆம்புலன்ஸில் வரமாட்டேன் இருசக்கர வாகனத்தில் வருவதாக தெரிவித்ததோடு, தனக்கு ஏசி வசதிகொண்ட தனி அறை வேண்டும் என்றும் வாதிட்டார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட தனியார் செய்தியாளைரை விமர்சித்து கொலைமிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால், நிருபர் அளித்த புகாரின் படி வீரபாண்டி போலீசார் ரவுடி பேபி சூர்யா மீது ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.