தமிழகத்தில் கால்பதிக்கும் அடுத்த கட்சி! அதிமுக மற்றும் தவெகவுடன் மெகா கூட்டணி பிளான்

0
170
there-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-electionsthere-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-elections
there-are-reports-that-edappadi-palaniswami-is-discussing-an-alliance-with-tvk-in-the-2026-assembly-elections

தமிழகத்தில் கால்பதிக்கும் அடுத்த கட்சி! அதிமுக மற்றும் தவெகவுடன் மெகா கூட்டணி பிளான்

நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்ததிலிருந்து தமிழக அரசியலில் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.  அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகம் வரவுள்ள சட்டமனற தேர்தலில் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என மக்கள் மனதில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக மறைந்த நடிகர் விஜயகாந்த் ஆரம்பித்த தேமுதிக தமிழக சட்ட சபையில் எதிர்க்கட்சியாக உருவாகும் வரை வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் விஜய் ஆரம்பித்துள்ள தவெக தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுமா என்பது குறித்த கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன. நம்பி வருபவர்களை ஆதரிப்போம் என நடிகர் விஜய் மாநாட்டில் பேசியதை வைத்து பார்த்தால் அவர் கூட்டணிக்கு தயாராக இருப்பது தெளிவாகிறது.

அதே நேரத்தில் தமிழக கட்சிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க தயாராகுமா என்பது குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. மாநாட்டில் பேசிய விஜய் பாஜக மற்றும் திமுகவை நேரிடையாக எதிர்த்து விமர்சனம் செய்திருந்த நிலையில் அவர்களுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.

அதே போல ஆட்சியில் பங்கு என்பது குறித்து விஜய் பேசியதற்கு திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்திருந்த நிலையில் அவர்களுடனும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. இந்நிலையில் விஜய் கட்சி ஆரம்பிக்கும் போது தம்பி என பாசமாக அழைத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்ததால் அவருடனும் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.

இந்நிலையில் மீதமிருப்பது தமிழகத்தில் அதிமுக, பாமக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளே. அந்த வகையில் நடிகர் விஜய்யும் இந்த கட்சிகளை விமர்சிக்காமல் தவிர்த்து வருகிறார். இந்நிலையில் தான் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆர். காங்கிரஸ் தவெக கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

N. Rangaswamy
N. Rangaswamy

அந்த வகையில் வரவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது தமிழகத்திலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தமிழகத்தில் உள்ள சில முக்கிய தலைவர்கள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் என்.ஆர்.காங்கிரஸ் தமிழகத்தில் போட்டியிடும் நிலையில் அது தவெக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிமுக உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளை இந்த கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Previous articleஅமெரிக்க பாடப்புத்தகத்தில் இந்திய நபர்!! வன மனிதன்!!
Next articleRCB அணியில் இருந்து நான் விலகி விட்டேன்!! மேக்ஸ்வெல் போட்டுடைத்த உண்மை!!