IPL: தக்கவைக்கபடாதது குறித்து கருத்து கூறிய ஸ்டார்க் அதற்கு பதிலளித்த kkr அணி நிர்வாகம்
ஐ பி எல் மெகா ஏலமானது இந்த மாத கடைசியில் நடைபெறவுள்ளது. இந்த ஐ பி எல் ஏலம் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணியும் தங்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. மொத அணிகளும் சேர்த்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளது.
சென்ற ஆண்டு ஐ பி எல் கோப்பையை kkr அணி வென்றது. kkr அணி கோப்பையை வென்று தந்த ஸ்ரேயர் ஐயரை தக்க வைக்கவில்லை இது ரசிகர்களிடையே பரபரப்பபை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கும் தக்க வைக்கப்படவில்லை. மிட்செல் ஸ்டார்க் மினி ஏலத்தில் ரூ. 24.75 கோடிக்கு வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மிட்செல் ஸ்டார்க் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து kkr அணி நிர்வாகம் ஏதும் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை பிரான்சியஸ் போட்டி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார். கேப்டன் ஸ்ரேயர்ஸ் ஐயரும் இதுபோன்ற கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து பதில் கூறியுள்ள kkr அணி தலைமை செயல் அதிகாரி வெங்கி கூறுகையில் நாங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்களுடனும் தொடர்பில் இருக்கிறோம் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் மட்டுமல்லாமல், அணியில் உள்ள மற்ற வீரர்களுடன் தொடர்பு கொண்டோம். ஆனால் சிலர் எங்களை பற்றி தவறான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். மற்ற வீரர்கள் எங்களை பற்றி புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்று கூறினார்.
kkr அணி தற்போது ரிங்கு சிங் ரூ.13 கோடி, வருண் சக்கரவர்த்தி ரூ. 12 கோடி, சுனில் நரைன் ரூ. 12 கோடி, ஆண்ட்ரே ரஸ்ஸல் ரூ. 12 கோடி, ஹர்ஷித் ராணா ரூ.4 கோடி, ரமன்தீப் சிங் ரூ.4 கோடிக்கும் தங்கவைக்கப்பட்டனர். இந்த ஆண்டு ரிங்கு சிங் கேப்டனாக செயல்படுவார் என கூறப்படுகிறது.