ஆண்மையை அதிகரிக்கும் அருகம்புல்.. இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா?

0
89
Arugula that increases virility.. is it a cure for so many diseases?
Arugula that increases virility.. is it a cure for so many diseases?

சித்த மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்பாடு இன்றியமையாதது.உடலில் உண்டாக்க கூடிய பல நோய்களுக்கு அருகம்புல் மருந்தாக செயல்படுகிறது.ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு,இதய நோய்,இரத்த சோகை,தோல் நோய் போன்ற பல வியாதிகளுக்கு அருகம்புல் மருந்தாக பயன்படுகிறது.

அருகம்புல் மற்றும் அதன் வேரில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கிறது.தினமும் ஒரு கிளாஸ் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும்.

இரத்த சோகை,நரம்பு தளர்ச்சி,வயிறு வலி,இருதய நோய் குணமாக அருகம்புல்லை அரைத்து அதன் சாறை ஒரு கிளாஸ் வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க அருகம்புல் சாறில் சிறிது தேன் கலந்து பருகலாம்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் அருகம்புல் சசாறு குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கழிவுகள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணையில் சேர்த்து தைலம் போல் காய்ச்சி சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தால் பலன் கிடைக்கும்.

அருகம்புல் வேரை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து இடித்து ஒரு கப் நீரில் காய்ச்சி குடித்து வந்தால் தூக்கமின்மை,மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்தால் அரிப்பு குணமாகும்.அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து பசும்பால் கலந்து குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்.

Previous articleகந்தசஷ்டி விரதம் 2024: முருகனுக்கு படைக்க வேண்டிய நெய்வேத்தியம் மற்றும் தானத்திற்கு உகந்த பொருள் எது?
Next articleகரும்புள்ளிகளை மறையச் செய்யும் அற்புத பேஸ் பேக்!! இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!