இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி தொடரில் ஓடிசா அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசியுள்ளார். இதன் மூலம் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார் ஸ்ரேயர்ஸ் ஐயர். இதற்கு சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இவர் கடைசியாக சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார் இதில் இவர் மிகவும் மோசமான பேட்டிங் காரணமாக அதன் பின் எந்த போட்டியிலும் அணியில் இடம்பெறவில்லை. அவர் நீண்ட காலமாக மீண்டும் சிறப்பான ஆட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
இவர் IPL போட்டிகளில் கோப்பையை வென்ற கேப்டன் என்றாலும் அவர் ஐ பி எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதனால் KKR அணி நிர்வாகம் அவரை தக்க வைக்கவில்லை இது ரசிகர்கள் மத்தியில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது.
அதன் பின் இந்திய ஏ அணியில் கூட இவர் இடம்பெறவில்லை. ரஞ்சி தொடரில் மும்பை அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். ஒடிசாவுக்கு எதிரான போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் 150 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டாம் நாள் தொடக்கத்தில் இவர் இரட்டை சதம் அடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரட்டை சதம் விளாசினார். இந்த ஸ்ரேயர்ஸ் ஐயரின் சிறப்பான கம்பேக் KKR அணியை சோகத்தில் ஆழ்த்தும் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.