கணவனால் கை விடப்பட்டவர்கள் ரூ1000 பெற இது கட்டாயமில்லை!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
115
Important information published by Tamil Nadu Government!!
Important information published by Tamil Nadu Government!!

Tamilnadu Gov: ஆதரவற்றோர் சான்று பெறுவது குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தமிழக அரசானது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவித்தொகை கொடுத்து வருகிறது. இதில் மாதந்தோறும் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு ரூ 1000 வழங்கி வருகிறது. அதேபோல பள்ளி முடித்து உயர் கல்வி படிப்பிற்காக “புதுமைப்பெண்” திட்டம் மூலமும் ஆயிரம் வழங்கி வருகிறது. இவ்வாறு இருக்கையில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், கணவனை இழந்தவர்களுக்கும் மாதந்தோறும் உதவித்தொகை கொடுத்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில் ஒவ்வொரு உதவித்தொகை பெறுவதற்கும் அதற்குரிய ஆவணங்கள் கொடுப்பது கட்டாயம். இதில் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெற ஆதரவற்றோர் சான்றிதல் கொடுக்க வேண்டும். இந்த சான்று பெறுவதற்கு, நீங்கள் யாரின் துணை இல்லாமல் இருக்கவேண்டுமென தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

இதனால் கனவானால் கை விடப்பட்டவர்கள் மேலும் விதவை பெண்கள் எங்களுக்கு குழந்தைகள் உள்ளனர். யாரும் இல்லாதவர்கள் தான் இதில் விண்ணப்பிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பினர். இதனை விளக்கி கூறும் படி தமிழக அரசிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கேட்டிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு தற்பொழுது விளக்கமளித்துள்ளது.

அதில்,ஆதரவற்றோர் பெரும் சான்றிதழில் யாரின் துணை இல்லாதவர்கள் என்பதற்கு குழந்தைகள் உறவினர்கள் என யாரும் இருக்க கூடாது என்ற அர்த்தம் கிடையாது. துணை இருக்க கூடாது என்பது மட்டுமே இதன் பொருள், மேலும் இதுகுறித்து சார்நிலை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர். இவ்வாறு விளக்கமளித்ததன் பெயரில் இச்சான்று பெறுவதிலிருந்த குழப்பம் நீங்கியுள்ளது.

Previous articleநாம் தமிழர் கட்சியில் பிரபல பெண் நிர்வாகி விலகல் ! தொடர்ச்சியாக சீமான் மீது குற்றச்சாட்டு!!
Next articlecsk  அணியில்  விளையாட போகும்  முகமது சிராஜ்!!  CSK அணி போட்ட ட்வீட்  வெளியான புதிய திட்டம்!!