நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.அந்தவகையில் 70 வயதை கடந்தவர்களுக்கு இலவச மருத்துவம் வழங்கும் வகையில் ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கி வருகிறது.
அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டம் பற்றி தெரிந்திருக்கும்.ஆனால் இந்த ஆயுஷ்மான் வே வந்தனா என்ற திட்டம் பற்றி தெரிய வாய்ப்பு குறைவு தான்.ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்தின் மூலம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை பெற சில வரம்புகள் இருக்கிறது.ஆனால் ஆயுஷ்மான் வே வந்தனா திட்டத்திற்கு வருமான வரம்பு போன்ற எந்த வரம்பும் கிடையாது.70 வயதிற்கு மேற்பட்ட ஏழை,பணக்காரர் யார் வேண்டுமானாலும் இந்த மருத்துவ காப்பீட்டு அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் மூத்த குடிமக்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை வழங்க வேண்டும் என்பது தான்.
இந்த திட்டத்தின் மூலம் ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைக்கு பதிவு செய்ய e-KYC அவசியமாகும்.
இத்திட்டத்திற்கு பதிவு செய்ய முக்கிய ஆவணம் ஆதார் மட்டுமே.
ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு மொபைல் எண்ணை என்டர் செய்யவும்.பிறகு பயனாளியின் விவரங்கள் மற்றும் ஆதார் விவரங்களை என்டர் செய்யவும்.பிறகு விண்ணப்பத்தை பதிவேற்றவும்.உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆயுஷ்மான் வயா வந்தனா அட்டை வழங்கப்படும்.