கால்சியம் நிறைந்த பானங்களில் ஒன்றாக திகழும் பால்,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.உடல் எடையை பராமரிக்கவும்,தேவையற்ற கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது.தினமும் ஒரு கிளாஸ் பால் குடிப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க முடியும்.
நாட்டு மாட்டு பாலில் அடர்த்தி குறைவாக இருப்பதால் அதன் பருகும் போது எளிதில் ஜீரணமாகிவிடுகிறது.மஞ்சள் காமாலை,மூல நோய்,குடற்புண் போன்ற பாதிப்புகளை குணமாக்க மூலிகைகளை காய்ச்சாத பசும் பாலில் கலந்து கொடுத்தால் எளிதில் குணமாகும்.நாம் பருகும் பானங்களிலேயே சிறந்த ஊட்டச்சத்து பானம் பசும் பால்.வளரும் குழந்தைகளுக்கு தேவையான ப்ரோடீன்,கால்சியம் உள்ளிட்ட ஊட்டசத்துக்கள் இதில் அடங்கியிருக்கிறது.
இருதய நோய்,உடல் பருமன்,இரத்த கொதிப்பு போன்ற பாதிப்புகளுக்கு பால் சிறந்த ஊட்டச்சத்து பானமாக திகழ்கிறது.என்னதான் இதில் அதிக நன்மைகள் அடங்கியிருந்தாலும் அதற்கு சமமான அளவு தீமைகளும் அடங்கியிருக்கிறது.
பாலில் உள்ள தீமைகள்:-
பாலில் உள்ள அதிகளவு அமிலம் எலும்புகளை பலவீனமாக்கிவிடும்.பாலை அளவாக குடித்தால் உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
ஆனால் அளவிற்கு அதிகமாக பால் அருந்தினால் இரத்த சோகை பிரச்சனை ஏற்படும்.
அளவிற்கு மீறி பால் அருந்தினால் சர்க்கரை நோய்,பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும்.
சிலருக்கு அதிகளவு பால் குடிப்பதால் பால் ஒவ்வாமை பிரச்சனை உருவாகும்.ஆஸ்துமா மற்றும் சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள் பால் அருந்தினால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும்.