நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் வெட்டிவேர் அதிக வாசனை நிறைந்த மூலிகையாகும்.தரையில் வளரக் கூடிய புல் வகையான வெட்டிவேர் மூட்டு வலி,கால் வலி,உடல் சூடு,வியர்க்குரு,தூக்கமின்மை,தோல் நோய்,மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்தாக திகழ்கிறது.
வெட்டிவேரை சர்பத்தில் சேர்த்து குடித்தால் வாய்ப்புண்,உடல் சூடு போன்ற பாதிப்புகள் குணமாகும்.வெட்டிவேரை அரைத்து சந்தனம் மற்றும் பன்னீர் கலந்து உடலில் பூசி குளித்தால் வியர்க்குரு குணமாகும்.
தினமும் தூங்கும் போது வெட்டிவேரை தலையணையில் வைத்து படுத்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.ஒரு கிளாஸ் நீரில் வெட்டிவேர் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல்,சிறுநீர் கடுப்பு,உடல் சோர்வு,மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் குணமாகும்.உடலில் சூடு தனிய வெட்டிவேரை அரைத்து தலைக்கு அப்ளை செய்து குளிக்கலாம்.
மூட்டு வலி,கை கால் வலி,கால் எரிச்சல் குணமாக வெட்டிவேரில் தயாரிக்கப்பட்ட எண்ணயை பயன்படுத்தலாம்.
வெட்டிவேர் எண்ணெய் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1)வெட்டிவேர் – ஒரு கைப்பிடி அளவு
2)தேங்காய் எண்ணெய் – 100 மில்லி
3)நல்லெண்ணெய் – 100 மில்லி
செய்முறை:-
முதலில் ஒரு கைப்பிடி அளவு வெட்டிவேரை எடுத்து கத்தி கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் வாணலி வைத்து 100 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் 100 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
அதற்கு அடுத்து நறுக்கி வைத்துள்ள வெட்டிவேரை போட்டு குறைந்த தீயில் நன்கு காய்ச்சி ஆறவிட்டு பாதிக்கப்பட்ட மூட்டு மற்றும் கால்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் வலி,வீக்கம் அனைத்தும் நீங்கும்.