தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், கடற்கரை ஓரம் உள்ள மாவட்டங்களில் அதிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் நேற்று முதல் ஓரிரு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது வருகிறது. நேற்று சென்னையில் பெய்த மழையினால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வண்டலூர் மேம்பாலம், பெருங்களத்தூர் மேம்பாலம், தாம்பரம் மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் கனமழைக்கான இடங்களை குறிப்பிட்டுள்ளது. அவை பின்வருமாறு :-
மதுரை , ராமநாதபுரம் , விருதுநகர், சிவகங்கை, தென்காசி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருவாரூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது.