பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு!! 12000 முதல் 16500 வரை மாத சம்பளம்!! உடனே விண்ணப்பங்களை அனுப்புங்கள்!!

0
97
Government employment for women!! 12000 to 16500 monthly salary!! Send applications now!!
Government employment for women!! 12000 to 16500 monthly salary!! Send applications now!!

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு முன்னெடுத்துள்ளது.

தற்போது சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் வேலைவாய்ப்பு முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது.சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றம் துறையின் கீழ் 181 என்ற பெண்கள் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. . இதன் மூலம் பெண்களுக்கான அரசு திட்டங்களை எடுத்துரைப்பது, தகவல்கள் வழங்குவது, பெண்களுக்கான உதவிகள் போன்ற சேவைகளை செய்ய முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கான கல்வி தகுதி, வயதுவரம்பு உள்ளிட்டவைகளை கீழ்வரும் விவரங்களில் காண்போம்.

பணி விவரம்:

கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு 5 இடங்களும், பல்துறை பணியாளர் பணிக்கு 2 இடங்களும், இரவு நேர பாதுகாவலர் பணிக்கு 3 இடங்களும் என மொத்தம் 10 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு

கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பல்துறை பணியாளர் பணிக்கு 55 வயதிற்குள் இருக்க வேண்டும். இரவு நேர பாதுகாவலர் பணிக்கு 55 வயதிற்குள் இருப்பது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி

கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு சமூக பணி, சமூக அறிவியல், உளவியல், பொது நிர்வாகம் ஆகிய படிப்புகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் நன்றாக பேசத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

பல்துறை பணியாளர் பணிக்கு கல்வித்தகுதி எதுவும் இல்லை. ஆனால், சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும். முன் அனுபவம் கட்டாயம் என்று கூறப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு காவலர் பணிக்கும் கல்வித்தகுதி தேவையில்லை. சென்னையைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் ராணுவத்தில் இருந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாவலர் பணிக்கு கல்வி தகுதி தேவையில்லை என்றும், ராணுவத்திலிருந்து அவர்களுக்கு முன்னுரிமை என்றும் கூறப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பாதுகாவலர் பணிக்கு நியமிப்பவர் சென்னை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்

கால் ரெஸ்பாண்ட்டர் பணிக்கு ரூ.16,500 சம்பளம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்துறை பணியாளர் பணிக்கு ரூ.15,000, இரவு

நேர பாதுகாவலர் பணிக்கு ரூ.12,000 சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணிகளில் சேர விரும்புவோர் நவம்பர் 11ஆம் தேதிக்குள் இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்த தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleமீண்டும் கொலை மிரட்டல்!! ஆனால் இந்த முறை புதிய ஹீரோ!!
Next articleகொட்டி தீர்க்கும் கனமழை!! பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!