cricke: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன்.
இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டிக்கு பின் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் விளையாடும் போட்டியில் விளையாட உள்ள நிலையில் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என கூறிய நிலையில், மாற்று வீரராக அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே எல் ராகுல் விளையாட வைக்க திட்டமிட்டது பிசிசிஐ .ஆனால் இந்த திட்டத்தில் மண்ணை அள்ளி போட்ட கே எல் ராகுல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன்.
நியூசிலாந்து போட்டிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் கே எல் ராகுல் ஆனால் ஒரு போட்டியில் மட்டும் விளையாடினர். அதன் பின் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என்று கூறியது.
இதை தொடர்ந்து பிசிசிஐ அபிமன்யு ஈஸ்வரனை அணியில் சேர்த்தது, அவருக்கு பயிற்சிக்காக அவர் இந்திய ஏ அணியில் இணைந்து ஆஸ்திரேலியா ஏ அணியுடன் விளையாடி வருகிறார். இந்த அணியில் பயிற்சிக்காக பின் கே எல் ராகுல் மற்றும் துருவ் ஜூரல் அனுப்பபட்டனர்.
இந்திய ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய ஏ அணி தோல்வியை தழுவிய நிலையில் இரண்டாவது போட்டியில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் சொதப்பிய அபிமன்யு முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்னில் அவுட் ஆனார்.
அவரை தொடர்ந்து கே எல் ராகுல் முதல் போட்டியில் 4 ரன்களில், இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்களில் அவுட் ஆனார். இதனால் ரோஹித் சர்மாவுக்கு பதில் திட்டமிட்டுள்ள வீரர்கள் அவரை விடவும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளது பிசிசிஐ.