UGC யின் புதிய அறிவிப்பு!! புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்ட நெட் தகுதி தேர்வு!!

0
73
New Notification of UGC!! New Syllabus Added NET Eligibility Test!!
New Notification of UGC!! New Syllabus Added NET Eligibility Test!!

தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன் மற்றும் டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழ், வரலாறு, பொருளியல் உட்பட இன்னொருக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும் மற்றும் இளநிலை பட்டப்படிப்பு ஆராய்ச்சிக்கான மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வு தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், நெட் தகுதி தேர்விற்கு எழுதப்படும் தேர்வினில் புதிதாக ஆயுர்வேதா உயிரியல் பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அதிகாரப்பூர்வமாக பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி நேற்று செய்தி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், யுஜசியின் 581-வது குழுக் கூட்டம் கடந்த ஜூன் 25-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் நிபுணர் குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் நெட் தேர்வு தொகுதியில் ஆயர்வேதா உயிரியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார்.

டிசம்பர் மாத பருவத் தேர்வில் இந்த மாற்றம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கான பாடத்திட்டம் யு ஜி சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் மேலும் தகவல்களை பெற வலைய தளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Previous articleஎஸ் பி முத்துராமன் தனக்கு இது வேண்டும் என்று கேட்க.. தலையில் அடித்துக் கொண்ட எம்ஜிஆர்!!
Next articleசஞ்சு சாம்சன் செய்த வரலாற்றுச் சாதனை!! தென்னாப்பிரிக்க மைதானத்தை சிக்ஸர் மழையால் நினைத்த சேட்டன்!!