இந்தியா முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான சிறப்பு சலுகைகள் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசால் அறிவிக்கப்பட்ட வருகிறது.
இதனைத் தொடர்ந்து உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் லக்னோவில் கடந்த மாதம் 28ஆம் தேதி
நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில், கலந்து கொண்ட மாவட்ட பயிற்சி அதிகாரி பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறியதாவது ;-
பெண்களுக்கான உடற்பயிற்சி மையம், யோகா மையங்கள், நாடக அரங்குகளில் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்என ஷாம்லி மாவட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். அதேபோல் பள்ளி பேருந்துகளில் பெண் பாதுகாப்பாளர் அல்லது ஆசிரியரை நியமிக்க வேண்டும். பெண்களுக்கான தையல் கடைகளில் பெண்களுக்கு அளவெடுக்க பெண் தையல்காரரை நியமிக்க வேண்டும். ஆண் தையல்காரர்கள் அளவெடுக்க கூடாது என்றும் அவர் தெய்வத்திருந்தார்.
கண்காணிப்பு கேமராக்களை பற்றியும் அவர் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியிருந்தார். அதில், பயிற்சி மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. பெண்களுக்கான ஜவுளிக்கடையில் உதவியாளர்களாக பெண்களை நியமிக்கவும் அறிவு றுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இவரைத் தொடர்ந்து, உத்திர பிரதேசத்தின் சமூக சேவகியான வீனா அகர்வால் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய கருத்தையும் தெரிவித்தார் என்பது வெளியாகி உள்ளது.