cricket: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் வருண் மற்றும் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் எடுத்தனர்.
நேற்று நடைபெற்ற இந்தியா தென்னாபிரிக்க இடையிலான முதல் டி 20 போட்டியில் தென்னாபிரிக்க அணி வீரர்கள் இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் சுழற்பந்தை எதிர்கொள்ள முடியாமல் போட்டியில் தோல்வி அடைந்தது.
இந்திய அணி தென்னாப்பிரிக்க சென்று 4 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது நேற்று தொடங்கியது. இதில் முதல் தென்னாப்பிரிக்க அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் களமிறங்கி 202 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்தது. அதிகபட்சமாக தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி அணியின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய் சிறப்பாக பந்து வீசினார். இருவரும் இணைந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தென்னாபிரிக்க அணியின் முக்கிய வீரரான ஹென்ரிச் கிளாசென் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 25 ரன்களும், ஜெரால்ட் கோட்சே 23 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது.