பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்ட குண்டு இன்று காலை வெடித்தலில் 50 க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இன்று காலை (சனிக்கிழமை ) பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அந்த ரயில் நிலையம் முழுவதிலும் பரபரப்பாக காணப்பட்டது. அங்குள்ள மக்கள் அனைவரும் அங்கும் இங்குமாக அலை மோதின.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50 மேற்பட்டோர் காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மற்ற நாட்களை விடவும் இன்று மக்கள் கூட்டம் குறைவு,இந்த சம்பவம் நடைபெறும் முன்பு அங்கிருந்த வேறு ரயில்கள் புறப்பட்டதால் உயிர்ச்சேதங்கள் குறைந்தது. அதற்கு முன் குண்டு வெடித்திருந்தால் உயிர் சேதங்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்திருக்கும். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமான விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.