நடிகர் சத்யராஜ் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றார் அதில் நடிகர் அஜித்தை பாராட்டியுள்ளார். மேலும் திராவிடம் பற்றி பேசிய அவர் விஜய் பற்றி மறைமுகமாக சீண்டியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் , பைக்கில் பயணம் செய்த அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் வேறு நாட்டுக்கு செல்லும் போது யாரோ ஒருவரை பார்க்கிறோம். அவருக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவருக்கும் நமக்கும் எந்த ஒரு சண்டையும் இல்லை ஆனால் நம் மீது அவருக்கு கோபம் வருகிறது என்றால் அதற்கு காரணம் மதம் தான் என்று அழகான கருத்தை கூறி பதிவை வெளியிட்டிருந்தார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள் என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் ஆரிய திராவிடத்தை எதிர்ப்பது சரிதான். ஆனால் தமிழ் தேசியம் என்ற பெயரில் எதிர்த்து ஆரியத்திற்கு துணை போவதுதான் மிகவும் ஆபத்து. தமிழ் தேசியத்தின் அரண் திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்கள் ஆட்சியில் இருக்கும் வரை இந்த அரண் ஒரு இரும்பு கோட்டையாக இருக்கும்.
இந்நிலையில் திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றுதான் என்ற கருத்தை மாநாட்டில் விஜய் கூறியிருந்த நிலையில் அந்த கொள்கையை தவறு என்ற வகையில் விஜய் யை விமர்சித்ததாக பார்க்கபடுகிறது.