RUSSIA: மக்கள் தொகை குறைந்து வரும் காரணத்தால் பாலியல் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்க உள்ளது ரஷ்யா
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக ஏராளமான வீரர்கள் மற்றும் மக்கள் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ரஷ்யாவில் பெருமளவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் பெருமளவில் மக்கள் தொகை குறைய வாய்ப்புள்ளது.
அதன் பின் தற்போது உள்ள நாடாக இல்லாமல் மக்கள் தொகை குறைவாக உள்ள நாடாக மாறி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளது ரஷ்யா. இந்நிலையில் சரிந்து வரும் மக்கள் தொடையை கருத்தில் வைத்து கொண்டு பாலியல் துறைக்கென தனி அமைச்சகம் உருவாக்க திட்டமிட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் தொகை இழப்பை சரி கட்டுவதற்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணைய சேவை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக ரஷ்யா அதிகார மையம் வெளியிட்டுள்ள தகவலில் ரஷ்யாவில் பாலியல் துறைக்கு என் தனை அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாலியல் ரீதியான விசயங்களுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். புதிதாக திருமண தம்பதிகள் ஹனிமூன் சென்று அறை எடுப்பதற்கான தொகைக்கு அரசு நிதி வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.