இந்திய குடிமக்களை பொறுத்தவரை 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இந்த வாக்காளர் அட்டை வாக்களிப்பதற்கு பயன்படும் மிகப்பெரிய உரிமை அட்டையாகும். இந்த அட்டை இருந்தால் மட்டுமே இந்திய பிரஜை என்ற தகுதி உள்ளவராக சமூகத்தில் மதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த அட்டையினை பதிவு செய்ய முகவரி சான்று, வயது சான்று, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் பான் கார்டு போன்றவற்றையும் பதிவு செய்திருக்க வேண்டும்.
தற்பொழுது, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டில் இருந்தே பெறுவதற்கான புதிய திட்டத்தினை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டையை பதிவு செய்யும் முறை :-
✓ ஆன்லைனில் விண்ணப்பிக்க, www.nvsp.in என்ற தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தை(NVSP) பார்வையிடவும் .
✓ New Voter Registration விருப்பத்தை கிளிக் செய்யவும்.
✓ அதில், பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், முகவரி, அடையாள ஆவணங்கள் முதலியவற்றை படிவம் 6-ல் சமர்பிக்கவும்.
✓ Submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
✓ Track Status விருப்பத்தை கிளிக் செய்து, உங்கள் விண்ணப்ப நிலையை தெரிந்து கொள்ளலாம்.
ஆஃப்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை பதிவு செய்யும் முறை :-
✓ அருகில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தின் பூத் லெவல் அதிகாரியிடம் இருந்து படிவம் 6-யை பெற்று பூர்த்தி செய்து, பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், முகவரி, அடையாள ஆவணங்கள் முதலியவற்றை சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
✓ அவர், உங்கள் படிவத்தை சரிபார்த்து, விண்ணப்ப எண் அடங்கிய ரசீதை வழங்குவார். ஒருவேளை, உங்கள் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அருகில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவிக்கலாம்.
இந்த எளிமையான வழிகளை பின்பற்றி வாக்காளர் அடையாள அட்டை வாங்காதவர்கள் மற்றும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் செய்து கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.