இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளையும் மக்களும் பயன் பெரும் வகையில் கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட திட்டம் தான் பாரத் ஆட்டா மற்றும் பாரத் ரைசுக்கான திட்டம்.
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மாவு மற்றும் அரிசி வழங்கும் புதிய முயற்சியை கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில், பணவீக்கம் அதிகரித்து வருவதை கண்ட இந்திய அரசு ஏழை எளிய மக்கள் உணவு பஞ்சத்தில் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.
இதற்காக பாரத் ஆட்டா என்ற பெயரில் மாவும், பாரத் ரைஸ் என்ற பெயரில் அரிசியும் வழங்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இது முறையே நாடு முழுவதும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ 27.50 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிலோ அரிசி 29 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது. இது NCCF மற்றும் கூட்டுறவு சங்கங்கள் உடன் NAFED இணைந்து இந்திய அரசின் மத்திய கிடங்கு மூலம் அரிசி மற்றும் கோதுமை மாவு விநியோகம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு போலவே இந்த ஆண்டும் குறைந்த விலையில் மக்களுக்கு பாரத ஆட்டா மற்றும் பாரத் ரைஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் இம்முறை பாரத ஆட்டா மற்றும் பாரத் ரைசின் விலைகள் சிறிதளவு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பாரத் ஆட்டா ஒரு கிலோ 30 ரூபாயாகவும், பாரத் ரைஸ் ஒரு கிலோ 34 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதனை வாங்க விரும்பும் மக்கள் ஆன்லைன் மூலம் கூட சுலபமாக வாங்கிக் கொள்ளும்படி புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.