தொடக்கக் கல்வித் துறையின் புதிய உத்தரவு!! அச்சத்தில் ஆசிரியர்கள்!!

0
95
New Order of Primary Education Department!! Teachers in fear!!
New Order of Primary Education Department!! Teachers in fear!!

பள்ளிகளுக்கு சரிவர வராமல் இருக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையை நேரடியாக மாவட்ட கல்வி அலுவலரே மேற்கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி நிலை, பள்ளியின் உடைய தரம் போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

கண்காணிப்பில் ஈடுபட்ட பொழுது, அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு தாமதமாக வருவதும், பள்ளிகள் முடியும் முன்பு பள்ளிகளை விட்டு கிளம்பி விடுவதும் தெரிய வந்துள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

இது மட்டும் இன்றி, தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி பணிக்கு வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியை நாகலட்சுமி, வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்த செய்தி தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர், ஆசிரியைகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இதனைத் தொடர்ந்து பல அரசு பள்ளிகளில் இது போன்ற விஷயங்கள் நிகழ்வாக புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

இதைத்தொடர்ந்து, அரசு பள்ளிகளில் பணிக்கு வராமல் அவருக்கு பதில் மற்ற ஆசிரியரை பாடம் நடத்த சொல்லுதல் மற்றும் பள்ளிகளுக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது தொடக்கப் கல்வித்துறை நேரடியாகவே மாவட்ட கல்வி அலுவலரே அவர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கையை மேற்கொள்ளும் படி உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பு. பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Previous articleஒரே கிளிக் ஒட்டு மொத்த பணமும் காலி!! ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய அரசு மருத்துவர்!!
Next articleகமலஹாசன் மீதும் கதை திருட்டு குற்றச்சாட்டு!! தேவர்மகன் கதை திருடப்பட்டதா!!