:
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் திடீர் கும்பலால் வாகனங்கள் மறிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் 3 பேர் காயம் மற்றும் 4 வாகனங்கள் சேதம்.
நேற்று மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இந்த செயல் வீரர்கள் கூட்டம் முடிந்த பின்பு அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் திருமங்கலம் வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென சில வாகனங்கள் அவர்களை வழிமறித்து அவர்களை அடித்து தாக்கியுள்ளனர். அதில் ஆதரவாளர்கள் 3 பேர் காயம் காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர், 4 கார்கள் சேதமடைந்துள்ளது.
இத்சன்ஷி தொடர்ந்து ஆர் பி உதயகுமார் பேரில் டிடிவி தினகரன் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஏற்கனவே ஆர் பி உதயகுமார் டிடிவி தினகரனை தவறாக பேசியதாகவும், அதற்காகத்தான் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.