இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் ஃபார்ம் குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் பேசியிருந்தார். இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கம்பீர் பாண்டிங்கிற்கு இந்திய கிரிக்கெட்டில் என்ன வேலை என்று கோபத்தில் சீறினார்.
இந்தியா நியூசிலாந்து தொடரில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது இந்த தொடரில் ஒரு ஒட்டியில் கூட வெற்றி பெற முடியாமல் ஒயிட் வாஷ் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் முக்கிய வீரர்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் சமீபத்தில் விராட் கோலி ஃபார்ம் குறித்து பேசிய ரிக்கி பாண்டிங் இதுவரை இந்த ஆண்டில் விராட் கோலி இரண்டு சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இது போன்ற ஃபார்ம் இல் மற்ற அணியில் ஒரு வீரர் தொடர்ந்து இடம்பெற மாட்டார் இந்திய அணியில் தான் இவ்வாறு நடக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
இந்தியா நியூசிலாந்து போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்தினர். விராட் கோலி 6 இன்னிங்ஸில் விளையாடி 93 ரன்கள் அடித்தார், ரோஹித் சர்மா 6 இன்னிங்ஸில் விளையாடி 91 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் இருவரின் சராசரி 15. எனவே இவ்வாறு விமர்சனம் செய்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
இதுகுறித்து கேள்விக்கு பதிலளித்த கம்பீர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா பற்றிய கவலை இல்லை இந்திய கிரிக்கெட்டில் ரிக்கிபாண்டிங்கிற்கு என்ன வேலை அவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டை பார்த்துக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார். மேலும் இருவருக்கும் ரன்கள் குவிக்கும் உத்வேகம் உள்ளது அது இந்த தொடரில் நடக்கும் என்றும் கூறியுள்ளார்.