CRICKET: சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கம்பீர் பற்றி கருத்து தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.
இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியா தொடருக்காக ஆஸ்திரேலியா பயணம் மேற்கொள்ள நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு திமிராக பதிலளித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இவரை செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து உடன் படு தோல்விக்கு பின் அடுத்த நடைபெற உள்ள இந்தியா ஆஸ்திரேலியா போட்டியில் 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் இந்திய அணி இரண்டு பேட்ச்களாக ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார். இதில் இந்தியா நியூசிலாந்து தோல்வி குறித்து விமர்சனங்கள் செய்வது என்னை பாதிக்காது. இந்த பனியின் கடினத்தை தெரிந்து கொள்ளவே நான் வந்தேன் என்று திமிராக பதிலளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் குறித்து கடுமையாக பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து கூறியுள்ளார், அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் பேசியதை பார்த்தேன் இனிமேல் அவரை இதுபோன்ற செய்தியாளர் சந்திப்பிற்கு அனுப்ப வேண்டாம். அவர் கடும் சொற்களை பயன்படுத்தி வருகிறார். அதனால் ரோஹித் சர்மா மற்றும் அஜித் அகர்கர் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றால் போதும் என பிசிசிஐ இடம் வலியுறுத்தியுள்ளார்.