BP-ஐ கட்டுப்படுத்த.. ஒரு கப் நீரில் இந்த இலையை கொதிக்க வைத்து சூப் போல் அருந்துங்கள்!!

0
106
To control BP.. Boil this leaf in a cup of water and drink it as a soup!!
To control BP.. Boil this leaf in a cup of water and drink it as a soup!!

அதிகளவு நன்மைகள் கொண்ட கீரைகளில் ஒன்று முருங்கை.இதில் வைட்டமின்கள்,இரும்பு,பொட்டாசியம்,பீட்டா கரோட்டின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது.

முருங்கை கீரையை பருப்புடன் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.முருங்கை கீரையில் சூப் செய்து குடித்து வந்தால் இரத்த அழுத்தம் முழுமையாக கட்டுப்படும்.இரும்புச்சத்து குறைபாடு அதாவது இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் முருங்கை கீரையை தினமும் உட்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் முருங்கை கீரை பானம் தயார் செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை கீரை – கால் கைப்பிடி
2)பூண்டு – இரண்டு பற்கள்
3)சின்ன வெங்காயம் – மூன்று
4)மஞ்சள் பொடி – 1/4 தேக்கரண்டி

பயன்படுத்தும் முறை:-

முதலில் கால் கப் அளவு முருங்கை கீரையை எடுத்து தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இரண்டு பல் வெள்ளை பூண்டை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.அதேபோல் மூன்று அல்லது ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்குங்கள்.அடுத்ததாக இடித்து வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை அதில் போட்டுக் கொள்ளுங்கள்.முருங்கை கீரை கொதிக்கும் தருவாயில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் உயர இரத்த அழுத்தம் சில நிமிடங்களில் கட்டுக்குள் வரும்.

Previous articleசிம்புவின் மீது பொறாமைப்படும் நடிகர்கள்!! மணிரத்தினத்தின் செல்லப்பிள்ளை!!
Next articleதலையில் சிக்கு வாடை அடிக்கிறதா? ஜஸ்ட் ஒரு பொருள் போதும்.. தலைமுடி மணக்கும்!!