மீண்டும் இந்திய டி20 அணியில் கே எல் ராகுல்!! லக்னோ அணிதான் காரணம் ராகுல் கூறியதில் எழுந்த சர்ச்சை!!

0
104

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் கே எல் ராகுல் அவர் தற்போது அந்த அணியில் தக்க வைக்கப்படவில்லை. லக்னோ அணியில் சுதந்திரம் இல்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார் கே எல் ராகுல்.

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடங்க உள்ள தொடரானது மார்ச் ஏப்ரல் மேஆகிய மாதங்களில் நடைபெறும். இந்த தொடருக்கான மெகா ஏலம் இந்த மாதம் 25 26 தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இதற்கு முன் அனைத்து அணிகளும் தங்களின் தக்கவைக்கப்பட்ட பட்டியலை வெளியிட்டது.

இதில் முக்கிய வீரர்கள் தக்க வைக்கப்படவில்லை அதில் முக்கியமானவர் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் கேப்டன் கே எல் ராகுல் சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூருக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்ஜீவ் கொயங்கா கே எல் ராகுலை களத்திலேயே கடுமையாக சாடினார். அதன்பின் அவர் அணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் இந்த முறை லக்னோ அணியில் அவர் தக்க வைக்கப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய கே எல் ராகுல் நான் இந்த முறை ஐபிஎல் தொடரில் புதிதாக தொடங்க விரும்புகிறேன் அதில் எனக்கான வாய்ப்புகள் என்ன என்பதை தான் நான் பார்க்க விரும்புகிறேன். எனக்கு எங்கு எளிமையான மற்றும் சுதந்திரமான அணி சூழ்நிலை இருக்கிறதோ அங்கு நான் விளையாட விரும்புகிறேன். சில நேரங்களில் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து நகர்ந்து சென்று நல்ல எழுத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் இந்திய டி20 அணியில் சில காலமாக விளையாடவில்லை. நான் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். என்னுடைய நோக்கம் இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெறுவது தான் எனவும் கூறியுள்ளார்.

இவர் கூறிய இந்த கருத்தின் மூலம் இவர் லக்னோ சூப்பர் ஜீன்ஸ் அணியில் விளையாடும் போது சரியாக விளையாட முடியவில்லை. மேலும் அதனால் தான் இந்திய டி20 அணியில் இடம் பெற முடியவில்லை என்பதை ராகுல் மறைமுகமாக கூறியிருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன.

Previous articleபுஷ்பா-2 படத்தின் டிரெய்லர் எப்போது!! படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!
Next articleபள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!!  கல்வித்துறை வழங்கிய  அதிரடி உத்தரவு!!