பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!!  கல்வித்துறை வழங்கிய  அதிரடி உத்தரவு!!

0
118
School education department has ordered to create e-mail addresses for students in schools
School education department has ordered to create e-mail addresses for students in schools

E-MAIL:பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு மின்னஞ்சல்(E-MAIL) முகவரியை உருவாக்க உத்தரவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

இந்தியாவில் அனைத்து துறைகளும் டிஜிட்டல்  முறையில் வளர்ச்சி பெற்று விட்டது. சாதாரண மின் கட்டணம் முதல் அனைத்து வகையான சேவைகளும் டிஜிட்டல் வடிவில் முன்னேற்றம் அடைந்துள்ளது.  ஒரு முறையான தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு மின்னஞ்சல் மிகவும் பயன்படுகிறது.  எனவே அரசு பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  மின்னஞ்சல் உருவாக்குவது தொடர்பாகவும் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் பயிற்சி அளிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று அறிக்கையில் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்து எந்த துறையினை மேற் படிப்பாக பயில வேண்டும் , எந்த துறைக்கு அதிக அளவில் வளர்ச்சி உள்ளது என அனைத்து விதமான வழிமுறைகளை தமிழக அரசு சார்பில்  வழங்க  பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் உயர் கல்வி( கல்லூரியில்) சேர  இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எவ்வாறு விண்ணப்பிக்க  மாணவர்களின் மின்னஞ்சல்(E-MAIL) மிக முக்கிய தேவையாக இருக்கிறது.

கல்லூரி தொடர்பான  தகவல்கள் விண்ணப்பித்த மாணவர்களின் மின்னஞ்சலுக்கு கல்லூரி சார்பாக அனுப்பப்படுகிறது. எனவே நடப்பு கல்வி ஆண்டில் (2024-25) 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் இ-மெயில் முகவரியை வகுப்பு ஆசிரியர்களின் உதவியுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Previous articleமீண்டும் இந்திய டி20 அணியில் கே எல் ராகுல்!! லக்னோ அணிதான் காரணம் ராகுல் கூறியதில் எழுந்த சர்ச்சை!!
Next articleசர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலியா கேப்டன்!! விமர்சனத்தால் வெளுத்து வாங்கும் கிரிக்கெட் வட்டாரங்கள்!!