இந்திய அணியின் நட்சத்திர வேத பந்துவீச்சாளர் முகமது ஷமி நாளை தொடங்க உள்ள ரஞ்சிக்கோப்பை தொடரில் பெங்கால் அணியில் இடம் பெற்று விளையாடுவதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இந்தியா நியூசிலாந்து தோல்விக்கு பின் இவரது இழப்பு என்னவென்று அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இவர் கடைசியாக ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விளையாடிய போது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அதன்பின் அவர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாக அறிவித்தார்.
இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து இடையிலான போட்டியில் பங்கேற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அப்போது பயிற்சி போது மீண்டும் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அதன்பின் ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை.
தற்போது காயம் குணமடைந்து பயிற்சி பெற்று வருகிறார் இந்த நிலையில் நாளை ரஞ்சிக்கோப்பை தொடரில் மத்திய பிரதேசத்திற்கு எதிராக பெங்கால் அணியில் சமீ விளையாட இருக்கிறார் என்பதை உறுதி செய்து அறிவித்துள்ளது பெங்கால் அணி