ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் புதிய மாற்றம்!! தமிழக அரசு அறிவிப்பு!!

0
134
A new change in the products offered in ration shops!! Tamil Nadu Government Notification!!
A new change in the products offered in ration shops!! Tamil Nadu Government Notification!!

நவம்பர் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொடுக்கப்படும் பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதுவரையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 கிலோ அரிசியில் 2 கிலோ கோதுமையும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது இவை இரண்டையும் சமமாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன்படி வழங்கப்படும் வருகிறது. அதாவது ரேஷன் அட்டை பயனர்களுக்கு 2.5 கிலோ அரிசியும், 2.5 கிலோ கோதுமையும் வழங்கப்பட உத்தரவிடப்பட்டது.

மேலும், அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் தானியங்களில் மாற்றம் செய்யப்பட்டு 18 கிலோ அரிசியுடன் 17 கிலோ கோதுமை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் இ – கேஒய்சியை முடிக்கும்படி அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதற்கான கடைசி தேதியாக செப்டம்பர் 1 இருந்த நிலையில், அது டிசம்பர் 31 வரை சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் அட்டைகளுடன் இ கேஒய்சி இணைக்க டிசம்பர் 31 ஆம் தேதி வரை காலக்கெடு உள்ளது.

எனவே மக்கள் அனைவரும் மறக்காமல் தங்களுடைய ரேஷன் கார்டுகளில் இ கேஒய்சி இணைக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Previous articleதமிழ்நாட்டின் நீண்ட நாள் கோரிக்கை!! அமெரிக்காவில் நிறைவேற்றும் அதிபர்!!
Next articleஇந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம்!! இனி இன்டர்நெட்டுக்கு குறையவே கிடையாது!!