ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மே ஆகிய மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் RCB அணி நிர்வாகம் பட்லரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐ பி எல் தொடருக்கான ஐ பி எல் மெகா ஏலம் இந்த மாதம் 24 மட்டிரும் 25 தேதிகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்கள் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் மொத்தம் 46 வீரர்கள் தக்க வைக்கப்படனர். இதில் முக்கிய வீரர்கள் தக்க வைக்கப்படவில்லை.
இதில் பெங்களூரு அணி 3 வீரர்களை தக்க வைத்தது அதில் விராட் கோலி ரூ.21 கோடிக்கும், ரஜத் பட்டிதர் ரூ.11 கோடிக்கும், யஷ் தயாள் ரூ.4 கோடிக்கும் தங்கவைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து RCB அணி ரூ.83 கோடி தொகையுடன் ஏலத்தில் பங்கேற்க உள்ளது. மேலும் RCB அணியில் அவர்களின் பிளேயிங் லெவனிர்க்காக 8 வீரர்களை ஏலத்தில் வாங்க வேண்டும்.
இதில் லக்னோ அணி அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலை விடுவித்த நிலையில் RCB அணி ராகுலை வாங்க இருப்பதாக பரவலாக தகவல் வெளியாகி வந்த நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்படியும் கே எல் ராகுல் ஏலத்தில் பங்கேற்றால் அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதால் அவருக்கு அதிகபட்சமாக ரூ.20 கோடி தொகை தேவைப்படும்.
ஆனால் RCB அணி 8 வீரர்களை வாங்க வேண்டும் என்பதால் ராஜஸ்தான் அணி விடுவித்த ஜாஸ் பட்லர் மீது குறிவைதுள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது. பட்லரை வாங்கினால் அவர் தொடக்க வீரராக களமிறங்க முடியும் மேலும் விக்கெட் கீப்பர். இவருக்கு 34 வயது என்ற காரனத்தால் இவரை ரூ.10 கோடிக்கு வாங்க முடியும் எனவே இவரை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன.