தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனரான பாரதிராஜா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்று வந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் அதன் பின் வில்லனாக அறிமுகமாகி மெல்ல மெல்ல கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார். மேலும் அவர் அரசியலில் ஈடுபாடு உள்ளவர் அமைச்சராகவும் இருந்துள்ளார். அதன் பின் தனது மகனுக்காக அனைத்தையும் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றார்.
அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் இயக்கிய மருதநாயகம் திரைப்படத்தில் என்னை ஒரு கொடூர வில்லன் கேரக்டரில் நடிக்க கேட்டார். நான் கதை மூலமாக இந்த கதாபாத்திரத்தை நான் ஏற்க வில்லை. நான் அப்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்த நேரம் அது அந்த நேரத்தில் அவரை விரட்டி அடிக்கும் வில்லனாக நடிக்க முடியாத சூழல் ஆனால் கமல்ஹாசன் புரிந்து கொண்டார்.
அதன் பின் ஒரு சின்ன கேரக்டர் பாசிட்டிவ் ஆகா இருந்தால் கொடுங்கள் என்று கேட்டேன் ஆனால் கிடைக்கவில்லை. அதன் பின் விருமாண்டி திரைப்படத்தில் அவருடன் நான் விருப்பப்பட்டது போல் நல்ல கேரக்டராக அவருடன் நடித்தேன் என்று கூறியுள்ளார்.