Indonesia: வீட்டின் கூரை வழியாக வந்த விழுந்த கல்லால் ஒரே நொடியில் கோடிஸ்வரன் ஆன இந்தோனேசிய வாலிபர்.
இந்தோனேசியாவில் உள்ள வாலிபர் ஒருவர் கூரையின் மீது விழுந்த கல். அந்தக் கல்லால் சவப்பெட்டி செய்யும் வாலிபர் அந்தக் கல் விழுந்த ஒரு நொடியில் 14 கோடிக்கு சொந்தக்காரர் ஆகி பணக்காரனாகியுள்ளார் .
இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் உள்ள கோலாங்கில் என்ற ஊரில் வசித்து வரும் வாலிபர் ஜோஸ்வா. ஒரு நாள் இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரையில் ஒரு ஒரு கல் வந்து விழுந்தது. அந்தக் கல் கூரை உடைத்துக் கொண்டு நடு வீட்டில் விழுந்தது. தூக்கத்திலிருந்து எழுந்து என்ன என்று போய் பார்த்தபோது அந்தக் கல் வீட்டின் நடுவே பூமியை பிளந்து கொண்டு 15 சென்டி மீட்டர் ஆழத்திற்கு சென்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜோஸ்வா அந்தக் கல்லை எடுத்து பார்த்தார். அப்போது அவருக்கு அந்த கல் பூமியில் இருக்கக்கூடிய சாதாரண கல் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டார். பின்னர் அந்தக் கல் ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. அந்தக் கல் சுமார் 2 கிலோ எடையும் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்பது அந்த ஆய்வில் தெரிய வந்தது.
அந்தக் கல்லை பற்றி அறிந்த அமெரிக்காவை சேர்ந்த ஜாரத் காலின்ஸ் இந்த கல்லைப் பற்றி அறிந்தவுடன் இந்தோனேசியா சென்று சுமார் 14 கோடி கொடுத்து அந்தக் கல்லை வாங்கி உள்ளார். கூரை பிச்சி கொண்டு கொட்டிய பணமழை என்பது போல கூரைன் மேல் விழுந்து கல்லின் மூலமாக ஒரே நாளில் கல் விழுந்த ஒரு நொடியில் 14 கோடிக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார் ஜோஸ்வா.
மேலும் இவர் சவப்பெட்டி செய்து வந்த தொழிலாளர் அவர். இது குறித்து அவர் கூறுகையில் நான் சாகப்பட்டியில் செய்வேன் அதில் எனக்கு எந்த வருமானமும் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கு மாறாக என் வாழ்க்கை மாறிவிட்டது கிடைத்த பணத்தில் நான் ஒரு தேவாலயம் கட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.