திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் பெண் இருவருக்குமே வாழ்கையில் முக்கியமான ஒன்று. அந்த நிகழ்வில் ஆடை அணியாமல் நிர்வாணமாக திருமணம் செய்துள்ள அதிர்ச்சி மற்றும் ஆச்சரிய சம்பவம் நடந்தேறியுள்ளது.
திருமணத்தை பொறுத்தவரை ஒவ்வொரு நாட்டை பொருத்தும், ஒவ்வொரு மதத்தை பொருத்தும் திருமணம் செய்யும் முறை மாறுபடும். திருமணம் என்றாலே அதற்கு முக்கியமாக பெண் முக்கியத்துவம் கொடுப்பது ஆடைக்கு தான். அதற்கென பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே அதிக செலவு செய்வார்கள் என நாம் அறிந்திருக்கிறோம்.
ஜமைக்காவில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நடந்துள்ள 29 ஜோடி திருமணம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது. திருமணம் செய்யும் தம்பதி மட்டுமல்லாமல் அந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும் உறவினர்களும் நிர்வாணத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.
கரீபியன் தீவு நாடு தான் ஜமைக்கா இந்த நாட்டில் தான் இந்த வினோத திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் 2003 ல் நடைபெற்றது. இந்த சம்பவம் 2000 ம் ஆண்டு தான் தொடங்கியது. ஜமைக்காவில் ஹேடோனிசம் ரிசார்ட்டில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த ரிசாட்டிற்கு வரும் மக்களுக்கு ஒரு வினோதமான அனுபவத்தை தர வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற திருமணத்தை செய்துள்ளது.
இதில் 2001 ம் ஆண்டு முதலில் 8 ஜோடிகளுக்கு திருமணம் செய்தது. இதற்கு பலவிதமான எதிர்ப்புகள் வந்த போதிலும் அதனை கண்டுகொள்ளவில்லை. 2003 ம் ஆண்டு அதிகமாக ஒரு நேரத்தில் 29 ஜோடிகளுக்கு இந்த நிர்வாண திருமணத்தை செய்து வைத்துள்ளது. இதில் பல நாடுகளில் இருந்து கலந்து கொண்டு திருமணம் செய்துள்ளனர். தற்போதும் இதுபோன்ற வினோத சம்பவங்கள் வெவ்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.