கிராமபுறங்களில் வாழும் மக்களுக்கு கொட்டை கரந்தை என்ற செடி பற்றி தெரிய வாய்ப்பிருக்கிறது.நெற்பயிர் அறுவடைக்கு பிறகு இந்த கொட்டை கரந்தை செடி வயல்வெளிகளில் செழிப்பாக வளர்ந்து நிற்கும்.
இந்த செடிக்கு மொட்டை கரந்தை என்று மற்றொரு பெயரும் உண்டு.இந்த கரந்தை செடியில் வெண்மை மற்றும் செம்மை என்று இரு வகைகள் இருக்கின்றது.யானைக்கால் நோய்,மூலம்,இதய நோய் போன்ற பாதிப்புகளை குணமாக்க உதவுகிறது.
பூக்கள் பூக்காத கொட்டை கரந்தை செடியில் உள்ள இலைகளை பறித்து நன்கு உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவிற்கு எடுத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்த கொட்டை கரந்தை செடியில் உள்ள இலைகள் உடலில் நோய் தொற்றுகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.உடலுக்கு தேவையான வலிமை கிடைக்க உதவுகிறது.ஆஸ்துமா,சளி தொந்தரவு இருப்பவர்கள் பூக்காத கொட்டை கரந்தை செடியில் உள்ள இலைகளை அரைத்து சாறு எடுத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை சரி செய்ய கொட்டை கரந்தை இலை உதவுகிறது.நன்கு உலர்த்திய கொட்டை கரந்தை இலையை பொடித்து கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
கொட்டை கரந்தை இலை பொடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடியை பேஸ்டாக்கி தலையில் தடவி குளித்து வந்தால் இளநரை நீங்கும்.தேங்காய் எண்ணையில் கொட்டை கரந்தை இலையை போட்டு காய்ச்சி தலைக்கு அப்ளை செய்து வந்தால் முடி உதிர்தல் நின்று அதன் வளர்ச்சி அதிகரிக்கும்