இனி கடையில் Horliks வாங்க தேவையில்லை!! கோதுமை இருந்தால் போதும் வீட்டிலேயே செய்யலாம்!!

0
693
No need to buy Horlics at the store anymore!! If you have wheat you can make it at home!!
No need to buy Horlics at the store anymore!! If you have wheat you can make it at home!!

குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பும் ஹார்லிக்ஸை வீட்டிலேயே தாயார் செய்வது குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை – ஒரு கப்
2)பாதாம் பருப்பு – 50 கிராம்
3)நிலக்கடலை – 50 கிராம்
4)பால் பவுடர் – 50 கிராம்
5)கோகோ பவுடர் – ஒரு தேக்கரண்டி
6)ஏலக்காய் தூள் – ஒரு தேக்கரண்டி
7)சர்க்கரை – அரை கப்

செய்முறை விளக்கம்:-

*முதலில் ஒரு கப் அளவு கோதுமை எடுத்து தண்ணீரில் இரண்டு முதல் மூன்று முறை அலசி எடுங்கள்.

*பிறகு இதை காட்டன் துணியில் பரப்பி ஒரு வாரத்திற்கு வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

*கோதுமை நன்கு காய்ந்து வந்ததும் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கோதுமையை கொட்டி வாசனை வரும் வரை வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு தட்டில் கொட்டி நன்கு ஆறவிடுங்கள்.

*அதற்கு அடுத்து 50 கிராம் பாதாம் பருப்பை வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.அதேபோல் 50 கிராம் நிலக்கடலையை வாணலியில் போட்டு வறுத்து நன்கு ஆறவிடவும்.

*பிறகு மிக்ஸி ஜார் ஒன்றை எடுத்து ஈரமில்லாமல் துடைத்து கொள்ளுங்கள்.அதில் வறுத்த கோதுமையை போட்டு பவுடர் பதத்திற்கு அரைக்கவும்.[பிறகு இதை சலித்து வைத்துக் கொள்ளுங்கள்.

*அதற்கு அடுத்து வறுத்து வைத்துள்ள பாதாம் பருப்பு மற்றும் நிலக்கடலையை தனி தனியாக அரைத்து சலித்து கொள்ளுங்கள்.பிறகு அரைத்த கோதுமை மாவு,பாதாம் பொடி மற்றும் நிலக்கடலை மாவை ஒன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

*அதன் பிறகு 50 கிராம் பால் பவுடரை மிக்ஸி ஜாரில் போட்டு அரை கப் வெள்ளை சர்க்கரை சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இதை கோதுமை மிக்ஸில் கலக்கவும்.

*இறுதியாக வாசனைக்காக ஒரு தேக்கரண்டி கோகோ பவுடர் மற்றும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிடவும்.அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த ஹோம் மேட் ஹார்லிக்ஸ் ரெடி.இதை ஈரமில்லாத காற்று புகாத டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பச்சை வாசனை நீங்கியதும் பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தயார் செய்து வைத்துள்ள ஹோம் ஹார்லிக்ஸ் தேவையான அளவு சேர்த்து கலக்கி பருக வேண்டும்.

Previous articleநயன்தாராவை நான் அப்படிதான் பார்த்தேன்!! பிரபல இயக்குனர் வாக்கு மூலம்!!
Next articleஉங்களது பல் மஞ்சள் நிறமாக இருப்பதால் கவலையா!! 1 எலுமிச்சை போதும் இதை சரி செய்ய!!