ஸ்மார்ட்போன்களின் விலையை பொறுத்தவரையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய உச்சத்தினை அடைந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் ஸ்மார்ட்போன்களில் பல புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் வருகிற 2025 ஆம் ஆண்டு ஸ்மார்ட் ஃபோன்களின் விலை இந்த ஆண்டு விட 5 சதவிகிதம் உயரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
செல்போன் விலை அதிகரிப்புக்கு காரணமாக, AI சிப்செட்களின் விலை அதிகரிப்பு, 5ஜி நெட்வர்க்கின் வருகையினால் ஏற்பட்டிருக்கும் செலவுகள் அதிகரிப்பு ஆகியவை கூறப்படுகின்றன.
இது குறித்த மார்க்கெட் அவுட்லுக் அறிக்கை :-
2024ஆம் ஆண்டில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விற்பனை விலை, உலகளவில் 3 சதவிகிதம் அதிகரித்து இருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. அதாவது, அமெரிக்க டாலர் விலையின் படி, $365ஆக இருக்குமாம். இந்த விலை, வரும் 2025ஆம் ஆண்டில், மேலும் 5 சதவிகிதம் அதிகரிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
உலக மக்கள், தற்போது அதிக சக்தி வாய்ந்த ப்ராசசர்கள் மற்றும் AI தொழில்நுட்பம் அடங்கிய அதிக விலையுள்ள ஸ்மார்ட் போன்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். பலர், இந்த அம்சம் இருக்கும் போன்களுக்குத்தான் முக்கியத்துவமும் கொடுக்கின்றனர். இதுவே விலை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
இவை மட்டுமின்றி, ஸ்மார்ட் ஃபோன்களை விலை உயர்ந்த சிப்புகள் பொருத்தப்படுகின்றன. அதாவது, AI அம்சங்கள் நிறைந்த போன்களின் விலை, குறிப்பாக Generative AI அம்சம் பொருந்திய ஸ்மார்ட் போன்களின் விலை அதிகரித்து வருகின்றன. இதனால், ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் நிறுவனங்கள், NPU, CPU மற்றும் GPU சிப்கள் கொண்ட போன்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்தச் சிப்புகள் விலை உயர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரணங்களால் தான் அடுத்த ஆண்டு ஸ்மார்ட் ஃபோன்களின் விலை ஆனது உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் போன் நிறுவனங்கள் GenAI தொழில்நுட்பங்களை அளிக்கவும் தீவிரம் காட்டி வருகின்றனவாம். இதைத்தொடர்ந்து, 3nm மற்றும் 4nm போன்ற மேம்பட்ட Process Nodes-களையும் போன் தயாரிப்பு நிருவனங்கள் இதில் இணைக்க ஏற்றுக்கொள்கின்றன. இதனாலும் அடுத்த ஆண்டில் செல்போன் விலையும், அதன் உற்பத்தியும் அதிகரிக்கலாம் எனக்கூறப்படுகிறது.