சென்னையில் எலி மருந்து அடிக்க பட்ட நெடியால் மூச்சு திணறல் ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மேலும் மருந்து அடித்த தினகரன் என்பரை கைது செய்துள்ளது காவல்துறை.
சென்னை குன்றத்தூர் அருகில் உள்ள மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன் மற்றும் பவித்ரா தம்பதியினர். இவருக்கு வைஷ்ணவி மற்றும் சுதர்சன் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் எலி தொல்லை அதிகம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் தி நகரில் பெஸ்ட் கண்ட்ரோல் நிறுவனத்தை தொடர்பு கொண்டு எலி தொல்லை காக மருந்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. பின் வழக்கம் போல ஏசி யை போட்டு தூங்கியுள்ளனர். அதன் பின் எலி மருந்தில் இருந்து நச்சு பொருள் காற்றில் பரவி நான்கு பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் எந்தவித பலனின்றி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். கணவன் மனைவி இருவரும் போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. காவல்துறை மருந்து தெளித்த தினகரனை கைது செய்தது. அந்த மருந்தில் அளவுக்கு அதிகமான நச்சு பொருள் இருந்ததே இந்த உயிரிழப்புக்கான காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.