ஈரான் என்பது ஒரு இஸ்லாமிய நாடு ஈரானில் போது இடங்களை செல்லும் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிந்து செல்ல வேண்டும் என்ற விதி ஈரானில் உள்ளது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் அணியாமல் விதிகளை மீறுகின்ற பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மனநல மையத்தை திறக்க போவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் மத்திய கிழக்கில் முழுவதும் இஸ்லாமிய நாடாகும்.அங்கு நடைபெற்று வரும் ஆட்சி முறை இஸ்லாமிய முறைப்படியே நடைபெற்று வருகிறது. அங்கு உயர் தலைவர் அலி ஹோசைனி இருக்கிறார். அங்கு பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டாய விதி உள்ளது. இதனை அந்த அரசு கடுமையாக செயல்படுத்தி வரும் நிலையில் அங்குள்ள பெண்கள் இதை எதிர்த்தும் வருகின்றனர். ஹிஜாப் அணியும் விதியை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகின்றன.
இதற்கு ஈரான் அரசு ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. ஹிஜாப் அணிய மறுக்கும் பெண்களுக்கு மனநல சிகிச்சை மையத்தை திறக்கபடுவதாக ஒரு சர்ச்சையான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மகளிர் மற்றும் குடும்ப துறை தலைவர் அறிவித்துள்ளதாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான ஈரானில் கடந்த சில ஆண்டுகளாக ஹிஜாப் அணியும் விவகாரம் வெடித்து வருகிறது. கடந்த 2022 ஹிஜாப் அணியாத ஒரு பெண்ணை அந்நாட்டு போலீஸ் அடித்து கொன்ற விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.