வாயில் மேஜிக் நடக்கனுமா? ஜஸ்ட் ஒன் கிராம்பை வாயில் வைத்து தூங்குங்கள்!!

Photo of author

By Gayathri

இந்திய மசாலா உணவுகளில் கிராம்பு(இலவங்கம்) நிச்சயம் இடம்பெறும்.இந்த கிராம்பு உணவின் சுவையை கூட்டும் ஒரு பொருள் என்பது மட்டுமே பெரும்பாலானோருக்கு தெரியும்.ஆனால் இது ஒரு சிறந்த மூலிகை பொருளாகும்.

கிராம்பில் டீ செய்து பருகினால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.கிராம்பில் யூஜெனோல் என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது.இது பல் சம்மந்தபட்ட பாதிப்புகளை குணமாக்க பெரிதும் உதவுகிறது.

கிராம்பை பொடித்து பல் தேய்த்து வந்தால் பற்களை படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.ஈறுகளில் இரத்த கசிவு இருந்தால் கிராம்பு பொடியை நீரில் கலந்து வாயை கொப்பளிக்க வேண்டும்.கிராம்பை இடித்து கல் உப்பு கலந்து பல் சொத்தை மீது வைத்தால் சிறிது நேரத்தில் வலி குறையும்.

அதேபோல் இரவு நேரத்தில் ஒரு முழு கிராம்பை வைத்து உறங்கினால் பற்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.கிராம்பில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு கிடைக்கும்.

கிராம்பில் காணப்படும் பண்புகள் வாயில் தங்கி இருக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.இதனால் வாய் துர்நாற்றம் ஏற்படுவது கட்டுப்படுகிறது.கிராம்பை வாயில் வைத்தால் அதன் சாறு உடலுக்கு நுழைந்து செரிமான அமைப்பை மேம்படுத்தும்.அதோடு வாயுத் தொல்லையும் முழுமையாக கட்டுப்படும்.எனவே தினமும் கிராம்பை வாயில் வைத்து வந்தால் பல் ஈறு பிரச்சனை,செரிமான பிரச்சினைகள் அனைத்தும் குணமாகும்.