உடம்பில் உள்ள ஒட்டுமொத்த நோய்களும் குணமாகி ஹெல்தியா இருக்கா.. இந்த ஒரு டீ போதும்!!

0
89
All the diseases in the body are cured and healthy.. This one tea is enough!!
All the diseases in the body are cured and healthy.. This one tea is enough!!

தினமும் முருங்கை கீரையில் தயாரித்த தேநீரை பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும்.சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,இரத்த சோகை,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் குணமாக முருங்கை கீரையை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கை கீரையை சமைத்து சாப்பிட நேரம் இல்லாதவர்கள் அதை பொடித்து தினமும் தேநீர் செய்து பருகலாம்.

முருங்கை கீரை டீ செய்முறை..

தேவையான பொருட்கள்:

1)முருங்கை கீரை பொடி
2)புதினா இலைகள்
3)க்ரீன் டீ
4)லெமன் சாறு
5)ஏலக்காய் பொடி

செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையை வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி வைத்துக் கொள்ளவும்.

இதை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி சேமிக்கவும்.இந்த முருங்கை இலை பொடி இரண்டு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

இப்பொழுது முருங்கை டீ செய்வது குறித்து பார்க்கலாம்.அதற்கு முதலில் நான்கு அல்லது ஐந்து புதினா இலைகளை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் நீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை பொடி,புதினா இலைகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

அதன் பின்னர் க்ரீன் டீ ஒரு தேக்கரண்டி மற்றும் வாசனைக்காக 1/4 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.விருப்பப்பட்டால் சிறிதளவு இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம்.முருங்கை கீரை டீ நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகலாம்.

Previous articleஉங்கள் குழந்தை 5 வயதிற்கு கீழ் உள்ளவரா? அப்போ இந்த FOODS மட்டும் கொடுக்காதீங்க ப்ளீஸ்!!
Next articleDYE அடிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த அச்சுறுத்தலை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!!