Jayam Ravi Divorce: ஜெயம்ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கானது வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி தம்பதியினர் தங்களது 15 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்வதாக விவாரத்துக் கோரி குடும்பநல நீதிமன்றத்தை நாடினர். ஆனால் ஆர்த்தி நான் விவாரகத்து தர மாட்டேன் என கூறியுள்ளார். ஆனால் ஜெயம்ரவி இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்நிறுத்தியுள்ளார். அதாவது வீட்டில் எனக்கு ஒரு நாய்க்கு தரும் மரியாதைக் கூட கிடைக்கவில்லை. வேலைக்காரர்களை போல நடத்துகின்றனர் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஜெயம்ரவியை சைக்காலஜிஸ்ட் கெனிஷாவுடன் தொடர்புபடுத்தி பேசி பல தகவல்கள் வெளிவந்தது. அதுமட்டுமின்றி கோவாவில் ஜெயம் ரவியின் காரை கெனிஷா ஓட்டி அதற்கு அபராதம் கட்டியதும் வெளியானது. இது மேலும் இவர்கள் ரகசிய உறவில் உள்ளனர் என்பதை நம்ப வைக்கும் வகையில் இருந்தது.
இவ்வாறு இருக்கையில் நேற்று இவர்களது வழக்கானது விசாரணைக்கு வந்தது. அதில் ஜெயம் ரவி, ஆர்த்தி, வழக்கறிஞர் என மூவரும் வீடியோ கான்பிரன்சில் இருந்தனர். தொடர்ந்து 10 நிமிடங்களாக நடைபெற்ற இந்த காணொளி மீட்டிங்கை தள்ளி வைக்க வேண்டும் என்று ஆர்த்தி தெரிவித்திருந்தார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அதனால் இந்த காணொளி வாயிலாக நடக்கும் மீட்டிங்கை வரும் 27 ஆம் தேதி தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதன்படி வழக்கறிஞர் இவர்களது வழக்கை அந்த தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.