முழங்கால் மூட்டு வலி இன்றைய காலத்தில் பொதுவான ஒரு பாதிப்பாகவிட்டது.முன்பெல்லாம் வயதானவர்கள் மூட்டுவலியை சந்தித்து வந்தனர்.இன்று வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் முழங்கால் வலி,மூட்டு வலி ஏற்படுகிறது.இதை சரி செய்ய கொத்தமல்லி விதைகள் உதவுகிறது.இதில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் எலும்பு மற்றும் ஜவ்வின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
1)கொத்தமல்லி விதை
2)பனங்கற்கண்டு
3)தண்ணீர்
முதலில் 10 கிராம் அளவிற்கு வர கொத்தமல்லி விதையை வாணலியில் சேர்க்கவும்.பிறகு இதை அடுப்பில் வைத்து வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்.கொத்தமல்லி கருகிடக் கூடாது.
வறுத்த கொத்தமல்லியை நன்கு ஆறவிடவும்.பிறகு இதை கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.அதற்கு நீங்கள் மிக்ஸி ஜாரை எடுத்து ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் வறுத்த கொத்தமல்லி விதைகளை போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.இதனோடு சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் அரைத்த கொத்தமல்லி பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் மூட்டு வலி,முழங்கால் வலி உள்ளிட்டவை குணமாகும்.அதேபோல் கொத்தமல்லி பொடியில் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும்.தைராய்டு பாதிப்பு இருப்பவர்களுக்கும் கொத்தமல்லி அருமருந்தாகிறது.