உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துகிறது.
கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.இதை உங்கள் டயட் பிளானில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கஞ்சி செய்ய தேவைப்படும் பொருட்கள்:
1)கருப்பு கவுனி அரிசி
2)வெங்காயம்
3)பூண்டு
4)சீரகம்
5)உப்பு
6)பச்சை மிளகாய்
7)கொத்தமல்லி தழை
செய்முறை விளக்கம்:
*இரவு நேரத்தில் பாத்திரம் ஒன்றில் ஒரு கப் கருப்பு கவுனி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
*மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஒரு குக்கரில் இந்த கருப்பு கவுனி அரிசியை சேர்த்துக் கொள்ளவும்.
*பிறகு இரண்டு வெள்ளைப் பூண்டை தோல் நீக்கிவிட்டு அதில் போட்டுக் கொள்ளவும்.அதற்கு அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தை கையில் வைத்து தேய்த்து கருப்பு கவுனி அரிசியில் சேர்க்கவும்.
*பிறகு ஒரு பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி அதில் சேர்க்கவும்.
*பிறகு அதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கர் மூடி போட்டு அடுப்பில் வைத்து மூன்று விசில் வரும் வரை வேகவிடவும்.
*பிறகு அடுப்பை அணைத்துவிட்டு விசில் நிற்கும் வரை காத்திருக்கவும்.பிறகு குக்கர் மூடியை ஓபன் செய்து தயாரான கஞ்சியில் சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கலக்கவும்.
*இந்த கருப்பு கவுனி கஞ்சியை தினமும் செய்து குடித்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.டயட் பிளானில் இந்த கருப்பு கவுனி கஞ்சியை சேர்த்துக் கொண்டால் உடல் எடை ஆரோக்கியமாக இருக்கும்.