பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்!! பெரும் பரபரப்பு!! மாணவர்கள் வெளியேற்றம்!!

0
72
Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!
Bomb threat at school!! Big excitement!! Students are expelled!!

Tiruppur: திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம் என இமெயில் மூலம் வந்த தகவலை வைத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மாணவர்கள் அதிகமாக செலவிடும் நேரம் என்றால் அது பள்ளிகள் தான். அந்த நிலையில் திருப்பூர் ராக்கியா பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சுமார் 1500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அந்த நிலையில் பள்ளி தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென்று பள்ளி அலுவலக இ-மெயில்-க்கு ஒரு தகவல் வந்தது. அதில் அந்த பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளோம், இன்னும் சிறிது நேரத்தில் அது வெடித்து விடும் என தெரிவித்து இருந்தது. அந்த செய்தியை பார்த்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக மாணவர்களை பள்ளியை விட்டு வெளியே வர வைத்து மைதனாத்தில் அமர வைத்தனர். பிறகு காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.

அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் அப்பள்ளியை சுற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த பள்ளியில் உள்ள அலுவலகங்கள், வகுப்பறைகள், கழிப்பறை என அனைத்து இடங்கள் மற்றும் மாணவர்களின் புத்தக பை, பள்ளி வாகனங்கள் என அனைத்தும் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை செய்தனர்.

ஆனால் தகவல் வந்தது போல் எந்த ஒரு வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இந்த தகவல் பொய்யானது என தெரிய வந்தது. இருப்பினும் பள்ளிக்கு விடுமுறை அளித்து பெற்றோர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பொய்யான தகவல் யார் அளித்தது என்பதை பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleபோண்டா பிரச்சனையால் வாயை விட்ட மாமியார்!! உயிரிழந்த மருமகள்!!
Next articleபுதிய படம் அப்டேட்-வுடன் பிறந்தநாள் கொண்டாடும் லேடி சூப்பர் ஸ்டார்!!