நம் நாட்டின் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கியில்(INDIAN BANK) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி காலியாக உள்ள “நிதி எழுத்தறிவு ஆலோசகர்” பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வகை: மத்திய அரசு வங்கி வேலை
நிறுவனம்: இந்தியன் வங்கி(INDIAN BANK)
பணி:
*நிதி எழுத்தறிவு ஆலோசகர்
காலிப்பணியிடங்கள்: நிதி எழுத்தறிவு ஆலோசகர் பணிக்கென பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கல்வி தகுதி:
நிதி எழுத்தறிவு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MS Office போன்ற அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
நிதி எழுத்தறிவு ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 68 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000 வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
நிதி எழுத்தர் ஆலோசகர் பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://www.indidanbank.in/ என்ற அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 இறுதி நாளாகும்.