உடல் எடை அதிகரிக்க முதல் காரணம் நாம் சாப்பிடும் உணவு என பலர் நினைக்கிறார்கள். அதனால் உணவுப் பொருட்களை குறைத்தால் உடல் பருமன் மாறி எடை குறைந்துவிடும் என நினைத்து, சாப்பிடாமல் இருந்து தங்களின் உடல் நலத்திற்கு அவர்கள் தீமை செய்து வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு பிடித்த உணவை கூட சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர்.
ஆனால் காலை நேரத்தில் கண்டிப்பாக உணவு சாப்பிட வேண்டும். இல்லையெனில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும். அதற்கு முக்கிய காரணம் இரவு உணவு சாப்பிட்ட பிறகு மீண்டும் நீண்ட நேர இடைவெளிக்கு பின் காலை உணவு சாப்பிடுவோம், இதனால் காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை அதிகரிக்க கூடும். மேலும் இருதய நோய் அறிகுறிகள் வரும் என சில சான்றுகள் குறிப்பிடுகிறது. உடல் பருமன் ஆக கூடாது என்றால், தினமும் நீரின் அளவு சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உடல் நீரோற்றதுடன் இருப்பது மிக அவசியம். மேலும் முக்கியமாக உணவு சாப்பிடாமல் இருப்பதற்கு பதிலாக தினமும் சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது, உடல் நலத்திற்கு ஏற்ற தூக்கம் ஆகியவை கால அட்டவணை போட்டு செயல்பட்டால் உடல் குறைப்பு முயற்சியில் பெரிதும் உதவியாக இருக்கும். உடல் எடை பராமரிப்பில் ஊட்டச்சத்துகள் மிக முக்கியம்.
எனவே ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்வது மிக அவசியம். உங்கள் உணவை உட்கொள்ளும் போது சிறிய பாத்திரத்தை பயன்படுத்துங்கள். சாப்பிடும் உணவின் அளவை அது பராமரிக்கும். உங்கள் உணவுகளில் கலோரிகள் கணக்கில் வைத்து அதற்கு ஏற்ற வகையில் உடற்பயிற்சி செய்வது மிக முக்கியமானதாகும். மேலும் உடல் எடையை குறைக்க தினசரி உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம்.