பி எம் கேர்ஸ் நிதி குறித்து பல்வேறு கேள்விகள் எதிர்க்கட்சியில் சார்பில் எழுப்பப்பட்ட நிலையில் தற்பொழுது பிரதமர் அலுவலகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் பி எம் கேர்ஸ் என்ற அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் நிதி திற்றட்டப்பட்டது.இதற்கு எதிர்கட்சிகள் பலர் இந்த அமைப்பு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும் பி எம் கேர்ஸ் நிதி பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இதற்கு பிரதமர் மோடி அலுவலகம் தக்க விளக்கம் அளித்துள்ளது.
ரூபாய் 2000 கோடி செலவில் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.இதில் 1,340 வெண்டிலேட்டர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் 275 ,டெல்லிக்கு 275, பீகாருக்கு 100,கர்நாடகாவில் 90 மற்றும் ராஜஸ்தானில் 75 வெண்டிலெட்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.மேலும் இந்த மாத இறுதிக்குள் 17,000 வென்டிலேட்டர்கள் டெலிவரி செய்யப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் விளக்கம் கூறியுள்ளது.
இதில் மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ரூபாய் 1000 கோடி அனைத்து மாநிலங்களுக்கும் நிதியாக கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 83 கோடி ரூபாய் தமிழ் நாட்டிற்கு மட்டுமே வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.