தமிழகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! அச்சமூட்டும் இன்றைய பாதிப்பு நிலவரம்

0
59
Corona Infection Rate in Tamilnadu
Corona Infection Rate in Tamilnadu

தமிழகத்தில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக 2516 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று (ஜூன் 23) தமிழக சுகாதாரத் துறை மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, விமானம் மற்றும் ரயில் மூலம் வந்த 38 நபர்கள் உள்ளிட்ட தமிழக முழுவதுமாக 2516 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 64,603 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 23,921 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் மொத்தமாக பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9,00,712 ஆக உள்ளது.

இன்று 1,227 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையானது 35,339 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையானது 28,428 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை, இன்று மட்டும் 1,380 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 44205 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதிப்பால் 39 நபர்கள் உயிரிழந்த நிலையில்,தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பலியானோரின் மொத்த எண்ணிக்கையானது 833 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு சென்னை மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாளை (ஜூன் 24) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.இந்த ஆலோசனையின் போது சென்னையில் அறிவித்துள்ளது போல மற்ற மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கபடுமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Ammasi Manickam