நோய்களை விரட்டும் மணத்தக்காளி கீரையின் ரகசியங்கள் இதோ!!

Photo of author

By Jeevitha

மணத்தக்காளி கீரையை நாம் பல வகையாக பயன்படுத்தலாம். வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை குணபடுத்த இந்த கீரை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மணத்தக்காளி கீரையில் வைட்டமின்-இ மற்றும் டி பெரும் அளவில் உள்ளது.  வயிற்றில்  ஏற்படும் புண்களை மணத்தக்காளி சரி செய்து விடும் என கிராமப்புற மக்கள் கூறுகிறார்கள்.

மணத்தக்காளி கீரையில் உள்ள பழங்களை வற்றல் செய்து அதை பயன்படுத்தும் மூலம் நீண்டகாலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசியை ஏற்படுத்துவதற்கு மிக சிறந்த மருந்து ஆகும். மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாக (Anti-Proliferative Activity) ஆய்வு உறுதிபடுத்துகிறது. உடலில் ஏற்படும் நோய்களை தவிர்க்கும் வல்லமை சக்தி கொண்டது. இந்த கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் புண், சிறுநீர் எரிச்சல் போன்ற பல பிரச்சனைகள் தீரும்.

மேலும் இந்த மணத்தக்காளி கீரையை சாப்பிடுவதன் மூலம் உடல் சூட்டை குறைத்து குளிர வைக்க செய்யும். அது மட்டும் அல்லாமல் சருமம் தொடர்பான பல வகையான பிரச்சினைகளை  தீர்க்க இந்த கீரை பயன்படுகிறது. மேலும் இந்த கீரை வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.

மணத்தக்காளி கீரை வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த மிக முக்கிய கீரை வகைகளில் ஒன்று. உடலில் உள்ள தேவையில்லாத நீரை வெளியேற்ற மிக உதவுகிறது. மேலும் இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணம் கொடுக்கும்.  மணத்தக்காளி  கீரை அதிகமாக வயிற்றில் உள்ள பிரச்சனைக்கு நிவாரணம் தருகிறது.