உஷார் மக்களே!! கோழிக்கறியில் இந்த பாகங்களை தவிர்க்கவில்லை என்றால் மிக பெரிய ஆபத்துநேரிடும்!!

0
73
Be careful people!! If you do not avoid these parts in chicken curry, there will be a great danger!!
Be careful people!! If you do not avoid these parts in chicken curry, there will be a great danger!!

கோழிக்கறி சாப்பிடுவதன் மூலம் நன்மைகள் இருந்தாலும் அவற்றின் உடல் பாகங்கள் அனைத்தும் சாப்பிட கூடாது. அதிலிருந்து சில பாகங்களை ஒதுக்கி விட வேண்டும். அந்த சில பாகங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறுகிறார்கள். தவிர்க்க வேண்டிய கோழி கறியின் பாகத்தில் முதலாவது சிக்கனின் கழுத்து பகுதி, சிக்கனின் தலை, சிக்கன் குடல், அவற்றின் கால்கள்.

மிக முக்கியமாக சிக்கன் தோல். இதற்கு காரணம் சிக்கனின் கழுத்து பகுதியில் நச்சு கிருமிகள் அடங்கிய நிணநீர் முனைகள் உள்ளன. இதை அடிக்கடி சாப்பிடும் போது புற்றுநோய் அபாயத்தை பெருக செய்துவிடும் என கூறுகிறார்கள். கோழியின் கால்களில் நிறைய ஹார்மோன்கள் உள்ளன. இதை சாப்பிடும் போது நம் உடலில் அதிக ஹார்மோன்கள் சேரும் எனவே இதை தவிர்க்க வேண்டும். கோழிகளின் தோலில் நிறைய கொழுப்புகள் மற்றும் கிருமிகள், ஒட்டுண்ணிகள் இருக்கிறது.

இதை சமைத்து சாப்பிடுவதன் மூலம் கலோரிகள் 50% அதிகரித்துவிடும் என ஊட்டச்சத்து தகவல் மையத்தின் நிபுணர் மரியா டோலோரஸ் பெர்னாண்டஸ் பசோஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தோலை உண்பதால் உயர் ரத்த அழுத்தம் இதய நோய் போன்ற நோய்கள் வரும் அபாயம் உள்ளது என USDA ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் கோழியின் சிக்கன் நுரையீரல், குடல், தலை போன்றவற்றில் பல நச்சு பொருட்கள் மற்றும் பாக்டீரியா, கிருமி என உள்ளதால் இதை சாப்பிடும் போது உடலில் கொழுப்பை அதிகரிக்க செய்யும்.

பொறுப்பு துறப்பு:

இந்த கட்டுரையில் உள்ள எந்த ஒரு தகவலும் நன்பகதன்மைக்கு உத்திரவாதம் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு வழங்கப்பட்டது. அதில் உள்ள தகவல்களை பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த தகவலை பயன்படுத்தி கொள்வது பயனாளரின் பொறுப்பாகும். எங்களின் நோக்கம் மக்களுக்கு தகவலை வழங்குவது மட்டுமே.

Previous articleவினோத ஆசையால் 9 குழந்தைகளை பெற்ற பெண்ணின் விபரீத முடிவு!!
Next articleமணிப்பூர் கலவரத்துக்கு காரணம் ப.சிதம்பரம் தான்!! முதல்வர் பைரன் சிங் பகிரங்க குற்றச்சாட்டு!!